
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையே இலங்கையில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை ஆகும்.இங்கு உள்நாட்டு,வெளிநாட்டு உயிரினங்கள் பல வளர்க்கப்படுகின்றன.இந்த வகையில் ஊர்வன பகுதியில் வளர்க்கப்படும் பாம்புகளில் அனகொண்டாவும் ஒன்றாகும்.இங்குள்ள இரண்டு அனகொண்டாவும் வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோது தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றது.இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அனகொண்டாவே கடந்த வெள்ளிக்கிழமை(11/07/2008) 23 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.இதில் மூன்று குட்டிகள் இறந்து விட்டன.இதனைத் தொடர்ந்து இக்குட்டிகள் தாயின் கண்ணாடிக் கூண்டில் இருந்து அகற்றப்பட்டு விசேட பராமரிப்பின் பின் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.ஆசியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா ஒன்று இவ்வாறு 20 குட்டிகளை ஈன்றெடுத்தது இதுவே முதல் முறையாகும்.இந்த மஞ்சள் நிறத்திலான (மஞ்சளும் கருப்பும் கொண்டது) அனகொண்டா சுமார் 12 அடி நீளத்தை உடையது.அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற இவை 8 -10 மீட்டர் வரை வளரக் கூடியது.ஆனக்கொண்டா என்பது "ஆனைக்கொன்றான்" (elephant killer) என்னும் தமிழ்ப் பெயரிலிருந்து உருவானதாக கருதப்படுகின்றது.
6 பின்னூட்டங்கள்:
//ஆனக்கொண்டா என்பது "ஆனைக்கொன்றான்" (elephant killer) என்னும் தமிழ்ப் பெயரிலிருந்து உருவானதாக கருதப்படுகின்றது.//
அனகோண்டா என்பது தமிழ் பேசப்படாத மற்றும் யானைகள் வாழாத லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் ஒரு உயிரினம். ஒரு வேளை 'லெமூரியா'வில் இவையெல்லாம் (அனகோண்டா, யானை, தமிழ், etc etc) ஒன்றாடு ஒன்று கூடிக் குலாவினவோ என்னவோ. எல்லாவற்றுக்கும் ஒரு தமிழ் மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது. :)
//Voice on Wings said...
எல்லாவற்றுக்கும் ஒரு தமிழ் மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது. :)//
எனக்கும் இப்பெயரில் சந்தேகம் உண்டு,எனெனில் அனகொண்டா யானைக் கொன்று உண்டதாக நான் கேள்விப்படவேயில்லை,இதனால் வேட்டையாடபடும் பெரிய விலங்கு எருமை/முதலை ஆகும்.அப்படி இருக்க இந்தப் பெயர் எப்படி???
இந்த முகவரியில் சென்று பாருங்கள்.....
http://www.botswanagallery.org/thesis/A/snakes.html
வருகைக்கு நன்றி Voice on Wings
//
23 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.இதில் மூன்று குட்டிகள் இறந்து விட்டன.//
மூன்று குட்டிகளையும் தாய் அனகொண்டா தின்று தீர்த்துவிட்டது. அதன் பின்னர்தான் இப்போது வேறாக்கி வைத்திருக்கிறார்கள்.
டமாஸூ; அனக்கொண்டாவையே கொன்றதால் (அனக்கொண்டா கில்லர்) இன்றிலிருந்து அனக்கொண்டகொண்டா எனும் பெயர் வழங்கி வரக்கடவது.
//மதுவதனன் மௌ. said...
மூன்று குட்டிகளையும் தாய் அனகொண்டா தின்று தீர்த்துவிட்டது. //
உண்மைதான்,அநேக உயிரினங்கள் தம்மால் குட்டியை வளர்க்க முடியாவிட்டால் அல்லது ஆரோக்கியமற்ற குட்டிகளை கொன்று தின்றுவிடும்.அல்லது தந்தை கொன்றுவிடும்,அப்பதான் தாய் மீண்டும் உறவு கொள்ள(கொல்ல அல்ல) சம்மதிக்கும்.
//அனக்கொண்டகொண்டா//
:)
வருகைக்கு நன்றி மதுவதனன்...
அனகோண்டாவின் பெயர் தமிழில் இருந்து பெறப்பட்டது என்று wiki, National Geographic Chennel ஐ மேற்கோள் காட்டுகிறது.
http://en.wikipedia.org/wiki/List_of_English_words_of_Tamil_origin#Words_of_Tamil_origin_borrowed_directly_from_Tamil
பட்டியலின் கீழே இருக்கும் குறிப்பையும் படிக்கவும்.
@Voice on Wings
உங்ஙகள் பின்னூட்டம் வருத்தத்தைத் தந்தது.
//எல்லாவற்றுக்கும் ஒரு தமிழ் மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது. :)//
தமிழராய் இருந்தும் ஏன் உங்களால் தமிழை ஏற்றுக் கொள்ள/ஏத்துக் கொள்ள முடியவில்லை என்று புரியவில்லை. நல்ல வேளை மேலே குறிப்பிட்டத் தரவு இருந்தது.
முகவை மைந்தன் நீங்கள் தந்த முகவரியில் தமிழ் ஆங்கில மொழிக்கு கொடுத்த சொற்களைக் கண்டேன்,நன்றி.
அணைக்கட்டு-annicut(dam) இதுவும் தமிழில் இருந்து (இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் போது)ஆங்கில மொழிக்கு சென்றதாக கேள்வி.உறுதியாக தெரியவில்லை
வருகைக்கு நன்றி முகவை மைந்தன்.
Post a Comment