Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

விசித்திரமான பல்லி

தென் ஆபிரிக்காவில் காணப்படும் விசித்திரமான பல்லி இனமே armadillo lizards.இந்த பல்லியின் நீளம் 16 தொடக்கம் 21 சென்டி மீட்டருக்கு இடைப்பட்டதாக இருக்கும்.ஒரு தரத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டி போடும் இந்தப் பல்லிகளின் வாழ்க்கை காலம் அன்னளவாக 25 வருடங்கள் ஆகும்.பாறை இடுக்கில் வாழும் இவை பகைவர் யாராவது தாக்க வந்தால் தனது வாலை கடித்துக்கொண்டு வட்டவடிவமாக காட்சி தரும்.கிழே உள்ள படத்தில் இதனைக் காணலாம்.

அபூர்வ சந்தர்ப்பம்

இயற்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடைபெறுகின்றன அவற்றை புகைப்படம் எடுப்பதற்கு பொறுமையும்,திறமையும் வேண்டும்.அவ்வாறான ஒர் சந்தர்ப்பமே இது...அனகோண்டாவினால் வேட்டையாடப்படும் நீர்யானை.
(இனி படம் உங்களுடன் பேசட்டும்)

நீர்யானைக்குட்டியை தத்தெடுத்த ஆண் ஆமை

2004 டிசம்பர் 26 அன்று ஏற்ப்பட்ட சுனாமியால் ஆசிய நாட்டு மக்கள் பெரும் உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்தனர்.உறவுகளை இழந்தோர் எராளம்.மனிதர்களுக்கு மட்டுமில்லை பிற உயிர் இனங்களுக்கும் இதே நிலைதான்.அவ்வாறன ஒர் சம்பவமே இது.சுனாமியால் கென்ய நாட்டின் கரையோரம் பாதிக்கப்பட்டபோது ஒரு வயது கூட நிரம்பாத நீர்யானைக்குட்டி ஒன்று தன் தாயை இழந்தது.இக்குட்டியை வன விலங்கு அதிகாரிகள் Mombassa க்கு கொண்டு வந்தனர்.அப்போது இதன் நிறை 300KG ,இக்குட்டிக்கு Owen என்று பெயர் சூட்டினர்.அங்கு ஒர் அதிசயம் நடந்தது.இக்குட்டியை 100 வயது நிரம்பிய ஆண் ஆமை தத்தெடுத்தது.அவ் ஆமை மகிழ்ச்சியாக நீர்யானைக்கு தாய் போன்று நடந்து கொண்டது. நீர்யானை கூட்டமாக வழும் மிருகம் .அதன் குட்டி தன் தாயுடன் 4 வருடமாவது இருக்க விரும்பும்.ஆனால் Owen இந்த ஆண் ஆமையை தன் தாயாக ஏற்றுக்கொண்டது.தாயை பின் தொடர்வதுபோல் பின் தொடர்ந்தது.யாரும் ஆமையை தொடச்சென்றால் நீர்யானைக்குட்டி கோபப்பட்டு துரத்துகின்றது.இரண்டும் ஒன்றாக நீந்துகின்றது,உண்கின்றது.இந்த அதிசயத்தை நிங்களும் பருங்கள்.

வெள்ளை உயிரினங்கள்

சிவாஜி படத்தில் ரஜனி வெள்ளைக்காரன் போல் ஒரு பாட்டுக்கு வருவார்.இதற்கு கணனி உதவியது.ஆனால் ஒரு சில மனிதர்கள் உச்சி முதல் பாதம் வரை வெள்ளையர் போன்ற உடல் வண்ணத்தையும் கண்ணின் கரு விழியும் முடியும் நிறமற்றும் கண்டிருப்போம்.இவர்கள் ரோப்பியர்கள் மத்தியில் கூட காணப்படுகின்றனர்.இதனை ஒருவித நோய் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தோல் கலங்களில் உற்பத்தி செய்யப்படும் மெலனின் மனிதனின் நிறத்திற்கு காரணமாக் அமைகின்றது.இதனைக் கட்டுப்படுத்துவது DNA ஆகும். DNA இல் ஏற்படும் மாற்றமே இன் நோய்க்கு காரணம்.இதனை அல்பினீசியம் என்பர்.இது சகல உயிரினங்களுக்கும் பொதுவான நோய்.தாவரங்களுக்கு இந்த அல்பினீசியம் வந்தால் உணவு தாயரிப்பதற்கு பச்சையம் இல்லாமல் முளைத்த உடனேயே இறந்து விடும்.ஆனால் விலங்குகளை பொறுத்தமட்டில் இணைத்தேர்வின் போது பிரச்சனையினை எதிர் நோக்குகின்றன.இவ் இனத்தோடு வேறு பால் உயிர்கள் இணை சேராது எனவே இவை தனியாகவே வாழ்ந்து இறந்துவிடும்.இதனால்தான் நாம் இவுயிர் இனதை பார்ப்பது கடினம்.ஆனால் இதனை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.இந்துக்கள் இந்திரனுடைய வெள்ளை யானை(ஐராவதம்?) பற்றி அறிந்திருப்பார்கள்.அட! வெள்ளை காக்கா கூட உண்டு.இதில் சில வெள்ளை உயிரினங்களை கிழே காணலாம்.

மான்

குரங்கு

ஒட்டைச்சிவிங்கி

சிங்கம்

புலி

பாம்புமயில் கங்காரு
காகம்
திமிங்கலம்
கரடி
பருந்து
ஒட்டகம்
பென்குயின்
அணில்
moose

எழுந்திரு நண்பா எழுந்திரு

பாசம்,இரக்கம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை,எங்களுக்கும் இரக்கம் இருக்கு என்று வீதியில் ஒர் பாச போராட்டமே நடத்தியது ஒர் நாய்!ஆம்,ஒன்றாக ஓடி விளையாடிய நாய் நடு வீதியில் கார் விபத்தில் இறந்துவிட,அதன் நண்பன் எங்கிருந்தோ ஓடி வந்து இறந்த நாயை தனது முன் காலினால் பல முறை தட்டி எழுப்பியது.முயற்சி கைகூடவில்லை, நண்பனை நடு வீதியில் இருந்து பாதுகாப்பாக வீதியின் கரைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தது. நண்பனின் அதிக நிறை காரணமாக அதுவும் பயனளிக்காமல் போனதால்.அந்த ஆபத்தான வாகன நெரிசல் மிகுந்த வீதியில் இறந்த நண்பனுக்கு அருகில் இருந்து ஊளையிட்டு அழ தொடங்கி விட்டது.இதனை பலரும் நேரில் கண்டுள்ளனர் அவர்களது கண்களும் கலங்கியது.இந்த நாய்க்கு உள்ள பாசத்தை நீங்களும் பாருங்கள்....