Showing posts with label சிறுகுறிப்பு. Show all posts
Showing posts with label சிறுகுறிப்பு. Show all posts

துப்பினால் தப்பமுடியாது

பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை எதிரியின் கண்களை நோக்கி பீச்சுகின்றன.இவ் விஷம் கண்ணில் பட்ட உடனே கண் குருடாகிவிடும்.இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும்.இரையை ஏணைய பாம்புகளைப்போல் கடித்து உணவாக்கிக் கொண்டாலும்,சில வேளை இரை சவாலாக விளங்கும்போது இவ்வாறு விஷத்தை பீச்சிக் கொல்கின்றன.இப்பாம்புகள் உணவாக தவளைகள்,சிறு முலையூட்டிகள் மற்றும் பறவைகளை உட்கொள்கின்றன.இந்த விஷம் உமிழும் கறுப்பு நாக பாம்பினால் 2 மீட்டர் தூரத்திற்க்கு விஷத்தை பீச்ச முடியும்.இப் பாம்புகள் 1.5 மீட்டர் நீளம் வரை வளரும்.யூன்,யூலை மாதங்களில் இணை சேரும் இப்பாம்புகள், 6 தொடக்கம் 20 முட்டைகளை இட்டு 88 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

ராஜ சிறுத்தை

பூனை இனத்தை Panthera, Felis என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.Panthera பிரிவிலே பெரும் பூனைகள், சிங்கம், ஜக்குவார், புலி, சிறுத்தை போன்றவை அடங்கும்.சிறுத்தையின் தோலில் சிறிய கரும்புள்ளிக் கூட்டங்கள் காணப்படும்.ஆனால் ராஜ சிறுத்தையின்(king cheetah) தோலில் சிக்கலான பெரும் கரும்புள்ளிகளுடன் இதன் முதுகில் (அணில் முதுகில் காணப்படுவது போல்) நீள கோடுகள் காணப்ப்டும்.இவ்வகை சிறுத்தைகள் மிக அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளன.முதன் முதலில் சிம்பாவே காட்டில் 1926 இல் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பின் 1975 வரை ஆறு தடவையே அவதானிக்கப்பட்டது.இதனால் இந்த ராஜ சிறுத்தையை புதிய இனமாகவும் சிறுத்தையினத்தின் உள் பிரிவாகவும் சிலர் கருதி விவாதித்தனர்.இதற்கு முற்றுப்புள்ளியாக 1980 இன் முற்பகுதியில் தென் ஆபிரிக்காவில் உள்ள De Wildt Cheetah Center இல் சாதாரண சிறுத்தை இரண்டு ராஜ சிறுத்தைக் குட்டிகளைப் போட்டது.இதன் பின்னர் இந்த ராஜ சிறுத்தையின் பிறப்புக்கு DNA இல் ஏற்படும் மாற்றமே காரணம் என அறியப்பட்டது.தற்போது உலகத்தில்(சிம்பாவே,ஆபிரிக்கா காட்டில்) பத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் இந்த ராஜ சிறுத்தைகள் வாழ்வதாக நம்பப்படுகின்றது.

ஈருடக மீன்

மனிதர்களுக்கு பொழுதுபோகாவிட்டால் கடற்கரைக்குப் போவதுபோல் மீன்களுக்கு பொழுதுபோகாவிட்டால் தரைக்கு வருமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்கின்றது mudskipper(மட்ஸ்கிப்பர்?)என்னும் மீன்.பெரும்பாலான மீன்கள் நீரில் மாத்திரம் வாழ்கை நடத்துவன. ஆனால் இந்த மட்ஸ்கிப்பர் நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடையது.அதிக நேரத்தை நீருக்கு வெளியில் செலவு செய்கின்றன.இவற்றை நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படும் பாறைகள்,வெளித்தெரியும் மர வேர் மற்றும் சேறு நிலத்தில் காணலாம்.நீருக்கு வெளியில் தனது வலிமையன துடுப்புகளைப் பயன்படுத்தி நடக்குகின்றன.தனது இரண்டு துடுப்புக்களையும் முன் வைத்துக்கொண்டு உடம்பை முன் இழுப்பதன் மூலம் இவை நகருகின்றன.இவ்வாறு நகர்வதற்கு இதன் வலிமையன மார்புத்தசை உதவி புரிகின்றது.தரையிலும் உணவு வேட்டையில் ஈடுபடும் இவை நீச்சல் திறன் குறைந்தவை.இந்த மட்ஸ்கிப்பர் மீனுக்கு கண்கள் தலையின் மேல் பகுதியில் காணப்படும்.இதனைப் பயன் படுத்தி 360 பாகையில் நடக்கும் அணைத்தையும் அவதானிக்க முடியும்.நிலத்தை தோண்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இவற்றால் 15 சென்ரீமீட்டர் வரை வளரமுடியும்.

அழகான ஆபத்து

கண்ணைப் பறிக்கும் நிறத்தில் காணப்படும் Golden Poison (Frog) தவளை தொடுபவர்களின் உயிரையும் பறிக்கும் வல்லமை கொண்டது.உலகில் 5,000 இற்கும் மேற்ப்பட்ட தவளை இனங்கள் காணப்படுகின்றன.இதில் "jewels of the rainforests" என் வர்ணிக்கப்படும் Golden Poison தவளை மிகவும் நச்சுத்தன்மை கொண்டது.இது கொலம்பியா நாட்டில் அதிகம் காணப்படுகின்றது.ஐந்து தொடக்கம் ஏழு வருடங்கள் வாழக்கூடிய இந்த தவளைகள் பிறந்து 13 - 18 மாதங்களில் இனப்பெருக்கத்திற்கு தயராகிவிடும்.இது ஐந்து சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது.இந்த தவளையின் கொடிய நஞ்சு இதன் தோலில் காணப்படும்.சராசரியக ஒரு மில்லிகிராம் நஞ்சு இதில் காணப்படும்.இது 10,000 சுண்டெலியை கொல்வதற்கு போதுமானது.அது மட்டுமின்றி பத்திற்கும் இருபதிற்கும் இடைப்பட்ட எண்ணிகையிலான மனிதர்களை கொல்லக் கூடியது இந்த நஞ்சு.அழகு எப்போதும் ஆபத்துதான்!

கொள்ளைக்கார நண்டு

இந்து சமுத்திரம் மற்றும் தென் பசிபிக் மகா சமுத்திரத்திர தீவுகளிலும் காணப்படும் நண்டு வகையில் ஒன்று தான் Coconut Crab.இதனை தமிழில் கொள்ளைக்கார நண்டு என அழைக்கின்றனர்.எட்டுக் கால்களை உடைய இந்த நண்டு தென்னை மரங்களில் ஏறி தேங்காயை தனது பலம் பொருந்திய இடுக்கியால்(முன் இருக்கும் ஒரு சோடி கால்கள்(pincers)) உடைத்துத் தின்று விடும்.தனது இடுக்கியால் 29 கிலோகிராம் வரையான பாரத்தை தூக்கும் திறன் படைத்தது.இதன் உடலின் நீளம் 40 சென்டி மீட்டர் ஆகும்.பொதுவாக பெண் நண்டை விட ஆண் நண்டு பெரிதாக இருக்கும்.இதன் நிறை அன்னளவாக 4 கிலோகிரமுடையது.இந்த கொள்ளைக்கார நண்டால் நீந்த முடியாது, நீரில் மூழ்கி விடும்.ஆறு மீட்டர் உயரமுள்ள (தென்னை) மரங்களிலும் ஏறும் இந்த கொள்ளைக்கார நண்டு 30 தொடக்கம் 60 வரையான வருடகாலம் வாழக்கூடியவை.

கோடுகள் போடப்பட்ட மிக அரிய முயல்

உலகின் மிக அரிதாகக் காணப்படும் கோடுகள் போடப்பட்ட முயல்(striped rabbit ) இந்தோனேஷியா மழைக்காட்டில் 2007ஆம் ஆண்டு சித்திரை மாத நடுப்பகுதியில் அவதானிக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.இப்புகைப்படம்(அருகில் உள்ள படம்) எடுக்கும் போது முயல் கமராவில் இருந்து சுமார் அரை மீட்டர் தூரத்தில் புல் மேய்ந்து கொண்டிருந்தது.இருப்பினும் இரவு நேரம் என்பதால் தெளிவில்லாத படமே எடுக்க முடிந்தது. இம் முயல் இனம் கடந்த 35 வருடகாலத்தில் மூன்று முறையே அவதானிக்கப்பட்டது.1972 ஆம் ஆண்டு விஞ்ஞானி ஒருவர் இம் முயலை கண்டபின், 2000 ஆம் ஆண்டில்தான் இறுதியாக புகைப்படம் எடுக்கப்பட்டது.அழிவின் விளிம்பில் இருக்கும் இம்முயல் இனம் சுமேத்திரா காட்டில் மாத்திரம் காணப்படுகின்றது.

சாதனைப் பூச்சி

"அட பூச்சியா !, ஊதினால் இருந்த இடத்திலிருந்து காணாமல் பறந்து போயிடும்."என்று பூச்சியை பலவீனமானது என கருதினோம்.அது தவறு பூச்சியிலும் பாரமான பூச்சி உண்டு.அப்பூச்சி உலகில் உள்ள பூச்சியினங்களில் எடை கூடிய பூச்சியினமாக உலக சாதனையும் படைத்துள்ளது(பூச்சி கூட சாதனை படைக்குது).இதனை இராட்சத வண்டு என்று அழைக்கிறார்கள்.(படத்தில் உள்ளது).இதன் விஞ்ஞானப் பெயர் "ஸ்கராபயோடியா" ஆகும்.ஆபிரிக்கா கண்டத்தின் பூமத்திய ரேகைப் பகுதிகளில்தான் இந்த இராட்சத வண்டினை காணமுடிகின்றது.இதன் நிறை 70 தொடக்கம் 100 கிராம் வரையில் காணப்படும்.இராட்சத வண்டின் கொம்பு நுனியில் இருந்து வயிற்றின் அடி வரையான நீளம் 11 cm அகும்.

Komodo dragons

தற்போது உலகில் வாழும் பல்லி இனத்தில் மிகப்பெரியது Komodo dragons ஆகும்.உலகில் கங்காரு அவுஸ்ரேலியாவில் மாத்திரம் உள்ளது போல், இது கொமடோ தீவில் மாத்திரம் இருக்கிறது.இது டைனோசரின் நேரடி வாரிசு என்ற கருத்தும் உண்டு.இவற்றால் சும்மார் 10 அடி வரை(3 மீட்டருக்கு மேல்) வளர முடியும்.சராசரியாக 8 அடி(2.5 மீட்டர்) நீளமும் 91 கிலோ கிராம் நிறையும் உடையது.ஆனால் பெண் Komodo dragon நீளம் 8 அடியை விட குறைவாகவும் ,68 கிலோ கிராம் நிறையும் கொண்டது.இந்த Komodo dragon இன் அபார மோப்பசக்தியானது 8.5 கிலோமீட்டருக்கு(5 மைல்)அப்பால் உள்ள இறந்து அழுகும் மாமிசத்தைக்கூட அனுகூலமான காற்றின் உதவி கொண்டு கண்டுபிடித்துவிடும்.இதன் வாயில் இருந்து வடியும் வீணத்தில் ஒரு வகைக் கொடிய பக்ரீரியாக்கள் உண்டு,இதனால் சிறு காயப்படுத்தப்பட்ட விலங்கைக் கூட சில நாட்களில் நோய் வாய்ப்படுத்தி இறக்க வைத்து விடும்.இப்பக்ரீரியாக்கள் இதன் ஒருவகை வேட்டை ஆயுதமாகும்.Komodo dragon அளவில் பெரியதாக இருப்பினும்,இதனால் மிகவும் வேகமாக நகரவும் விரைந்து செயல்படவும் முடியும்.இவை மரத்தில் ஏறக்கூடியதாகவும் ஏணைய பல்லிகளைப்போல் நல்ல நீச்சல் வீரர்களாகவும் விளங்குகின்றன.முதளை போல் இவை முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்கின்றன.

தகவல் உதவி யோகன் பாரிஸ்(Johan-Paris)

அரிய ஆமை இனம்

உலகத்தில் உள்ள மிகப்பெரிய உயிர் இனங்களில் ஒன்றும் அரியதுமான ஆமை இனம் ஒன்று கம்போடியாவின் Mekong ஆற்றங்கரையில் ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மீள கண்டுபிடித்துள்ளனர்.இந்த மிகப்பெரிய ஆமை இனம்(Cantor's giant turtle) அதன் மென்மையான ஓட்டினாலும் நீள்வளைவான முக அமைப்பினாலும் நன்கு அறியப்பட்டது.2003 பின் இவ் ஆமை இனத்தை காணததால் விஞ்ஞானிகள் இவினம் அழிந்து விட்டதாக கருதினர்.தற்போது மீள் கண்டுபிடித்த இவ் ஆமை இனத்தை உலகில் இருந்து அழிந்துபோவதை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.அதன் முதற்கட்டமாக இவ் ஆமை அதிகம் காணப்படும் Mekong ஆற்றுப்பகுதியை உலகின் மிகவும் முக்கியமான பிரதேசமாக பிரகடனப்படுதியுள்ளனர்.