Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

தினக்குரல் பத்திரிகையில் இயற்கை வலைப்பூ

தினக்குரல் பத்திரிகையில் வாரவாரம் "வலைப் பூக்கள்" என்னும் பெயரில் வலைப்பூக்கள் அறிமுகமாவது அணைவரும் அறிந்ததே.அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27/04/2008) எனது "இயற்கை" வலைப்பூ "காண்டீபனின் இயற்கை" என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் நான் மேலும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தினக்குரல் பக்க எண் 27 இல் வந்த அவ் ஆக்கம் மேலே படமாக.
இந்த ஆக்கத்தை எழுதிய க.தே.தாசன் அவர்களுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்.

சரித்திர நாயகர்கள் சொன்னது(அறிமுகம்)

உலகின் சரித்திர நாயகர்கள்
(படத்தின் மீது அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்)
மாற்றம் என்பது உலக நியதி.இந்த மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் தத்துவஞானிகள்,மாவீரர்கள்,அறிஞர்கள் என பட்டியல் நீண்டு செல்கின்றது.கடந்த காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் உலக நாயகர்களாக தடம் பதித்து, எம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.அவர்கள் சொன்ன வார்த்தைகள் தத்துவங்களாக போற்றப்படுகின்றது.சிறந்த தத்துவங்கள் உலகில் மாற்றங்களை ஏற்ப்படுத்துகின்றன.ஒருவனின் மிகச்சிறந்த அனுபவம் அல்லது அவனது அறிவுப்புலமை தத்துவங்களாக பிறக்கின்றது.தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் philosophy என அழைப்பார்கள்.இது உண்மையில் (p)பிலாஸ் மற்றும் ஸோ(p)பியா என்ற இரண்டு லத்தீன் சொற்களின் சேர்க்கை ஆகும்.(p)பிலாஸ் என்றால் அறிவு எனவும் ஸோ(p)பியா என்றால் நேசிப்பது எனவும் பொருள்ப்படும்.ஆக philosophy என்றால் "அறிவை நேசிப்பது" என பொருள்ப்படும்.இன்று முதல் இற்கையின் வலது மேல் மூலையில் சரித்திர நாயகர்கள் சொன்ன சிந்தனையை தூண்டும் வாக்கியங்கள் இடம் பெறுகின்றது.இது வாரவாரம் புதிப்பிக்கப்படும்.

-நன்றி-
அன்புடன்,
காண்டீபன்

இயற்கையின் மீள் அறிமுகம்

பதிவுலகில் நிலைத்து வேறுபட்டு இருக்கும் நோக்கத்துடன் அரம்பிக்கப்பட்ட வலைப்பூதான் "இயற்கை".சந்தையில் பற்றாகுறையாக உள்ள பொருளை(விடயத்தை) எடுத்து சற்று மாற்றத்துடன் விற்பனைக்கு விடுவது வியாபர உத்தி,இந்த உத்தி முறைதான் இயற்கை வலைப்பூ.பதிவுலகில் உயிர்ச் சுழல் தொடர்பான பதிவுகளில் காணப்படும் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது.2007 ஆம் ஆண்டு ஆக்கஸ்ட் மாதம் இயற்கை வலைப்பூ ஆரம்பித்த பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் நிறுத்த வேண்டிய தேவை ஏற்ப்பட்டது.அதாவது இயற்கை அழிவைச் சந்தித்தது.இந்த குறுகிய காலத்தில் இயற்கை வலைப்பூவுக்கு என ஒரு சில உயிர் இனங்கள் தொடர்பான கட்டுரைகள் ஆங்கில மொழியிலிருந்து தொகுக்கப்பட்டு தமிழில் எழுதப்பட்டது.இதில் சுறாமீன் தொடர்பன கட்டுரை முக்கியமானது.இக்கட்டுரையின் முதல் பாகம் 13/02/2008 அன்று வெளிவந்த தினக்குரலின் புதன் வசந்தத்தில் பிரசுரமாகி இருந்தது.இதற்கு முன்னரும் (14/11/2007 தினக்குரலில்) இயற்கையில் பதியப்பட்ட டொல்பின் தொடர்பான படங்களுடன் கூடிய சிறுகுறிப்பு ஒன்றும் பிரசுரமாகியது.இந்த அங்கிகரமும் சக நண்பர்களின் ஆதரவும் அழிவை சந்தித்த இயற்கைக்கு மீள் உயிர் கொடுக்க உத்வேகத்தை தந்தது.அழிவடைந்த இயற்கை வலைப்பூவின் எஞ்சிய உயிர்ச்சுவட்டுடன் புதிய இயற்கை வலைப்பூ ஆரம்பமாகின்றது.கடந்த காலங்களில் பின்னூட்டம் என்னும் உரமிட்டு இயற்கையை வளப்படுத்தியவர்கள் மற்றும் இயற்கையை ரசித்தவர்கள் ஆதரவு தொடர்ந்திருக்கும் என்னும் நம்பிகையோடு இயற்கை மீண்டும் துளிர்க்கின்றது...

அன்புடன்,
காண்டீபன்.