Showing posts with label சுறா. Show all posts
Showing posts with label சுறா. Show all posts

கொம்புள்ள சுறா?

சில தினங்களுக்கு முன் எனக்கு மின்னஞ்சலில் கிடைத்த கொம்புள்ள சுறாவின்(கற்பனை(?) ஒற்றைக் கொம்பு குதிரை போல) படங்களே இவை.அந்த மடலில் இவ்வகை சுறா ஆழ் கடலில் மிகவும் அரிதாக காணப்படுவதாக குறிப்பிடப்படிருந்தது.இருப்பினும் இது தொடர்பான உண்மைத்தன்மையை அல்லது மேலதிக தகவல் எதுவும் என்னால் பெறமுடிய வில்லை.உங்களுக்கு ஏதும் தெரிந்தால் கூறவும்.

வெள்ளைச் சுறா(பாகம் IV)

உலகில் தற்போதுள்ள சுறாக்களில் மிகக்கொடிய வேட்டையாடும் சுறா என அழைக்கப்படுவது வெள்ளைச் சுறாவை ஆகும்.இது 25 - 1.6 இடைப்பட்ட மில்லியன் வருடங்களுக்கு முன் அழிந்து போன MEGALODON சுறாவின் வாரிசு என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.பல் உயிர்ச்சுவட்டின் படி MEGALODON சுறா வெள்ளைச் சுறாவைப்போல் 2 அல்லது 3 மடங்கு பெரியது என் கணக்கிடப்படுகின்றது.வெள்ளைச் சுறாவுக்கு அடிப்பகுதி (மாத்திரம்) வெள்ளை நிறமாகவும் மேற்ப்பரப்பு சாம்பல் கலந்த நீல நிறமாகவும் காணப்படும்.கடலின் கிழ் பகுதில் இருந்து அவதானிக்கும் போது வானம் போலவும் நீர் மேற்ப்பரப்பிலிருந்து அவதானிக்கும் போது கடலின் அடிப்பகுதி போல் தன்னை உருமறைப்பு செய்வதற்க்கு இந்த நிறக்கலவை பயன் படுகின்றது(வேட்டையாடுவதற்க்கு).இது சராசரியாக 3200 கிலோகிராம் நிறையும் 12 அடி தொடக்கம் 16 அடி வரையான நிளமும் உடையது.சுறாவின் மோர்ப்ப சக்தி உணவை வேட்டை ஆடுவதற்கு பெரிதும் உதவி புரிகின்றது.வள்ர்ச்சி அடைந்த வெள்ளைச்சுறா கடல் சிங்கம் மற்றும் பிற சுறாக்களை உணவாக்கி கொள்ளும்.கடல் சிங்கம் போல் பெரிய உணவு கிடைத்தால் அதனை அனது வாயின் அளவுக்கு ஏற்ற துண்டக நறுக்கி விழுங்கிவிடும்.இது இரண்டு மாத உணவு தேவையை திருப்தி செய்யும்.வெள்ளைச்சுறா கடல் சிங்கத்தை வேட்டை ஆடும் காட்சி இங்கே...

மீன் இனங்களில் பெரியது(பாகம் III)

Mesozoic யுகத்தின் இறுதி பகுதியான Cretaceous காலத்தில் பாரிய விண்கல் ஒன்று புவி மீது மோதியதால் டைனோசர்களின் பொற்காலமாக விளங்கிய Mesozoic யுகம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து Paleozoic யுகத்தின் Permain காலத்தின் பிற்பகுதியில் தோற்றம்பெற்ற முலையூட்டிகள் Mesozoic யுகத்தை கடந்து தற்போதய Cenozoic யுகத்தின் Miocene சகாப்தத்தில் ஆட்சியின் உச்ச நிலையை அடைந்து பின்பு வீழ்ச்சியடைந்தன.தற்போது மனித இனம் ஆட்சியின் உச்ச நிலையில் இருக்கின்றது.இக்காலத்தில் வாழும் மிகப் பெரிய சுறா மீன் இனத்தை இப்பதிவில் பார்ப்போம்.

திமிங்கல சுறா

திமிங்கல சுறாவே மிகப்பெரிய சுறாவும் மிகப்பெரிய மீனுமாகும்.(சுறா ஒரு மீன் வகையைச் சேர்ந்தது).இது அகலமான தட்டையான தலையையும்,ஐந்து சோடி பெரிய நீளமான செவுளையும் கொண்டிருக்கும்.வாலின் கீழ் துடுப்பை விட மேல் துடுப்பு பெரிதாக காணப்படும்.திமிங்கல சுறாவின் நிறமானது கடும் சாம்பல் நிறத்தின் மீது மஞ்சள் புள்ளிகள் எழுமாறாகக் காணப்படும்.தோலின் தடிப்பு 4 அங்குலம்(10 சென்டி மீட்டர்)ஆகும்.திமிங்கல சுறா 50 அடி(15மீட்டர்) வரை வளரக்கூடியது.இதன் நிறை 15 தொன்(tons) ஆக காணப்படும்.வழமைபோல் பெண் சுறா ஆண்சுறாவை விட பெரிதாக இருக்கும்.திமிங்கல சுறாவானது தனது முழு உடலையும் பக்கவாட்டாக அசைப்பதன் மூலம் நீந்துகின்றது.(மற்ற சுறாக்கள் வாலை அசைப்பதன் மூலம் நீந்தும்.)இதன் வேகம் மணிக்கு 5 கிலோமீட்டர்(5kph)ஆகும்.

திமிங்கல சுறாவின் வாய் சுமார் 4 அடி(1.4மீட்டர்)வரை அகலமானது.இவ் வாய் மற்ற சுறாக்களுக்கு உள்ளதுபோல் தலையின் கீழ் பகுதியில் காணப்படாமல் தலையின் முன் பகுதியில் காணப்படும்.இதன் வாயினுள் 3,000 மிகச்சிறிய பற்கள் இருந்தபோதும் அவற்றின் பயன்பாடு சிறிய அளவில்தான் அமையும்.இதற்கு காரணம் திமிங்கல சுறா உணவை வடிகட்டி உண்பதே(filter feeders).திமிங்கல சுறா தனது வாயை திறந்தவாறு நீந்திச்செல்லும்.இதன் போது சிறுமீன்கள்,இறால்கள் போன்ற உணவு அடங்கிய நீரை உறிஞ்சி வாயினை நிரப்பிக் கொள்ளும்.வாயை முடிய பின்னர் சுறாவானது தனது செவுளை பயன்படுத்தி நீரில் இருந்து தனது உணவை பிரித்து உண்ணும்.செவுளில் காணப்படும் மென்சவ்வு ஆனது உணவை வெளிச்செல்லாமல் தடுப்பதோடு நீரை வெளியேற்ற உதவும்.இவ்வாறு சுறாவின் ஐந்து சோடி செவுளினால் ஒரு மணித்தியாலத்தில் (வாயினால் பெறப்படும்)6,000 லீட்டர் நீரை வெளியேற்ற முடியும்.
மிதமான சுடுள்ள நீரில் (பூமத்தியரேகைக்கு அருகில்)வாழும் திமிங்கல சுறா பெரும் நேரத்தை நீரின் மேற்பரப்பில் கழிக்கும்.இவை தனித்தே காணப்படும்.கூட்டமாகக் காண்பது அரிது.பிறக்கும்போது திமிங்கல சுறாவின் குட்டியின் நீளம் 2 அடி(60சென்டி மீட்டர்)ஆகும்.100 - 150 வருடங்கள் வாழும் என கணக்கிடப்பட்ட இவை தனது 30 ஆவது வயதில் இனவிருத்திக்கு தயாராகும்.

basking சுறா

basking சுறாவே இரண்டாவது பெரிய சுறாவாகும்.இது 33 அடி(10 மீட்டர்) நீளமுடையது.ஆண் சுறா 30 அடி(9மீட்டர்) நீளமுடையது.இதுவும் திமிங்கல சுறாவை போலவே மீன்குஞ்சுகள்,மீன் முட்டைகளை வடிகட்டி உண்ணும்.இது கரையோர மித உஷ்ண கடலில் வாழும். நீரின் மேற்பரப்பில் அதிக நேரத்தை செலவிடுவதால் இதனை sunfish என அழைப்பார்கள்.basking சுறா தனியாக அல்லது சோடியாக அல்லது குழுவாக பயணம் செய்யும்.ஆங்கிலத்தில் இக்கூட்டத்தை School என அழைப்பார்கள்.இதில் 100 வரையான basking சுறாக்கள் காணப்படும்.basking சுறா கருக்கட்டி 3.5 வருடங்களின் பின் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை இடும். இந்த குட்டி பிறக்கும் போது 5.5அடி(1.7 மீட்டர்) நீளமுடையது.இது 2 - 4 வருடத்தில் பருவம்(sexual maturity) அடையும்.basking சுறா உணவுக்காகவும்,எண்ணெய்க்காகவும் வேட்டையாடப்படுகின்றது.

தொடரும்...

சுறா மீனின் ஆரம்ப காலம்(பாகம் II)

அழிவடைந்த அங்கிகளை ஆராய்வதற்க்கு அதன் உயிர்ச்சுவடு உதவுகின்றன.ஆதிகாலத்தில் வாழ்ந்த அங்கிகள் இறந்து கற்பாறைகள்,பனிக்கட்டி,சேறு போன்றவற்றினுள் பிடிக்கப்பட்டு சிதையாமல் எஞ்சியுள்ள அங்கியின் கடினமான பாகங்கள் அல்லது அங்கியின் அடையாளங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களாகயிருத்தல் உயிர்ச்சுவடு எனப்படும்.உயிர்ச்சுவடு பெருமளவில் அடையற்பாறைகளில் காணப்படுகின்றது.இவ்வாறு தோண்டி எடுக்கப்படும் உயிர்ச்சுவடுகளின் வயதைக் கணிப்பதற்கு மிகவும் பொதுவான முறை உயிர்ச்சுவட்டில் உள்ள காபன் சமதானிகளின் வயதைக் கணித்தலாகும்.
மிகப் பழைய காலத்தைச் சார்ந்த சுறாவின் எஞ்சி அழிந்து கிடக்கும் "செதிள்கள்"(scales)உயிர்ச்சுவட்டின் படி அவை 420 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவை என்பதாகும்.அதாவது Silurian (சிலூரியன்) காலத்தின் முற்பகுதியாகும்.இந்த Silurian காலத்தில்தான் தாடை கொண்ட மீன்கள் தோற்றம் பெற்றன.ஆதியான என்பு மீன்கள்,சுறாக்கள் என்பன நவின வகைகளிற்கு முன்னோடியாக இருந்தன.சில வகை மீன்கள் வளியைச் சுவாசிக்கும் தன்மையை விருத்தி செய்தன.இவை சுவாசப்பை மீன்கள் எனப்படும்.இவை தரைவழ் முள்ளந்தண்டு விலங்குகள் தோன்றுவதற்கு வழிகோலியது.
சுறாவின் உயிர்ச்சுவடு கிடைப்பது அரிதானது.சுறாவுக்கு மீன்களை போல் எலும்புகள் கிடையது குருத்தெலும்பே உண்டு.இது சிறந்த உயிர்ச்சுவடாக அமைவதில்லை.ஆரம்ப கால சுறாக்களின் முக்கிய உயிர்ச்சுவட்டு ஆதரமாக கிடைப்பது அதன் பற்களே.இவ்வாறு கிடைக்கப்பெற்ற "மும் முனை பல்" உயிர்ச்சுவட்டின் படி அப்பல்லுக்குரிய பண்டைய சுறா 360 மில்லியன் வருடத்திற்கு முற்பட்டவை (இப்பகுதி Devonian (டிவோனியன்)காலத்தின் பிற்பகுதி ) என்றும் 1.5-6 அடி(0.5-2 மீட்டர்) நீள முடைய மாமிச உண்ணி எனவும் அறியப்படுகின்றது.

Orthacanthus சுறா

Orthacanthus சுறா பண்டைய கால நன்னீர் சுறாவாகும்.சுமார் 280 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது(Paleozoic யுகத்தைச் சேர்ந்தது).இதற்கு தலையின் பின் பகுதியில் நீளமான முள் ஒன்று மண்டை ஓடிலிருந்து வளர்ந்திருக்கும்.இதன் பல் பெரும்பாலான சுறாவிற்கு உள்ளதுபோல் 'V'வடிவமாகும். Orthacanthus சுறா ஓர் மாமிச உண்ணியாக விளங்கியது.

Hybodus சுறா இப் பண்டைய சுறா Paleozoic யுகதின் Carboniferous காலத்தை உருவக்கியது.இது 7.5 அடி(2.5மீட்டர்) நீளமுடையது.இச் சுறா Mesozoic (மீசொயிக்) யுகதின் இறுதியில் அழிவடைந்தது.இந்த Mesozoic யுகம்(250மில்லியன் ஆண்டுக்கு முன் - 65மில்லியன் ஆண்டுக்கு முன்) மூன்று காலமாக பிரிக்கப்படும்.அவை ஆவன Triassic,Jurassic,Cretaceous காலங்கள் ஆகும்.Triassic காலத்தில் டைனோசர்கள் தோன்றின.பின் பல்வகைமை அடைந்து Jurassic காலத்தில் ஆட்சியடைந்தது.இக்கால கட்டத்தில் நவின வகை சுறாக்கள் விருத்தியடைந்தன(150 மில்லியன் வருடங்களுக்கு முன்).இந்த Mesozoic யுகத்தின் இறுதி காலமான Cretaceous இல் டைனோசர்கள் ஆட்சியின் உச்ச நிலையை அடைந்தன.பின் குறுகிய புவிக்காலத்தில் முற்றாக அழிவடைந்தன.இதற்கு காரணம் 65மில்லியன் வருடங்களுக்கு முன் பாரிய விண்கல் ஒன்று புவி மீது மோதியமையே ஆகும்.இவ்விண்கலானது Mexico வளைகுடாவில் வீழ்ந்து அங்கு ஆழமாகப் புதைந்தது.இதன் விளைவால் தூசுக்களால் ஆன மிகப்பெரிய முகில் கூட்டங்கள் தோன்றின.இம்முகில் கூட்டங்களால் சூரிய ஒளி புவிமேற்பரப்பை சென்றடைவது தடுக்கப்பட்டது/குறைக்கப்பட்டது.இதனால் முதலுற்பத்தி பாதிப்படைந்து டைனோசர்கள் முற்றாக அழிந்தன.அத்துடன் Ammonites விலங்குக்கூட்டங்களும்,Hybodus சுறாக்களும் அழிவடைந்தன.

தொடரும்...

மிகக் கொடிய உயிரினம்!(பாகம் I)

சுறா ஒர் மீன் வகையைச் சேர்ந்தது.இதனை ஆங்கிலத்தில் Shark(ஷார்க்) என அழைக்கப்பட்ட போதும் ஜெர்மன் மொழியில் Shark என்பதன் பொருள் `மிகக் கொடிய' என்பதாகும்.சுறா இவுலகத்தில் சும்மார் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியவை.(அதாவது டைனோசர் காலத்தில்,மனிதன் பிறக்கும் முன்.)இன்றைய சுறா மீன்கள் 150 மில்லியன் ஆண்டுக்கு முன் பரிணம வளர்ச்சி கண்டவை அதன் பின் எந்தவித தோற்றம் மாறாமல் உலகில் இருந்து வருகின்றது.சுறாமீன்கள் உலகின் சகல கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.இவை சமுத்திரத்தில் மட்டுமன்றி ஆற்றிலும் சுறாமீன்கள் காணப்படுகின்றன.
தற்போது உலகில் 368 வகையான சுறாக்கள் இனங்காணப்பட்டுள்ளன.இவை 30 குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு சுறா குடும்பமும் தோற்றம்,வாழ்க்கை , உணவு முறையில் ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை.மேலும் ஒவ்வொரு சுறா இனமும் வடிவம்,அளவு, நிறம்,துடுப்புக்கள்(fins),பற்கள்,வழக்கமாகச் சாப்பிடும் ஆகாரம் மற்றும் பிற இயல்புகளில் வேறுபாடுள்ளவை.
சுறா மீன் வாழ் நாள் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கும்.முதிர்ந்த பருவம்(maturity) அடைந்த பின்பும் அதன் வளர்ச்சி தொடந்து கொண்டிருக்கும்,ஆனால் சற்று வாளர்ச்சி வேகம்(வீதம்)குறைவடையும்.ஒவ்வொரு சுறா இனத்திற்கும் வாளர்ச்சி வேகம் மாறுபடும்.சுறாவின் நீளம் இனத்திற்க்கு இனம் மாறுபடும்.சுறா மீன்களில் பெண் சுறா ஆண் சுறா மீனை விட பெரியதாகும். நன்றாக வளர்ச்சியடைந்த சுறாவை கருதினால் மிகச்சிறியது பிக்மி(Spined Pygmy) சுறா.இது 18 சென்டி மீட்டர்(7 அங்குலம்) நீளமுடையது.15 மீட்டர்(50 அடி) நீளமுடைய திமிங்கல சுறாவே தற்போது உலகில் உள்ள சுறா மீனில் பெரியது.கண்டுபிடிக்கப்பட்ட சுறா மீன் இனங்களில் அரைவாசி ஒரு மீட்டரை(39 அங்குலம்) விட குறைவான நீளத்தை உடையவை.
சுறாவின் எலும்பு வளையக்கூடிய குருத்தெலும்பால் ஆனது.மனிதனின் முக்கு மற்றும் காதில் இவ் எலும்பு உள்ளது.சுறா உணவை கிழித்து உண்பதற்க்கு அதன் வாயில் 3000 பற்கள் உண்டு.அதிக சுறா இனத்திற்க்கு இப்பற்கள் ஐந்து வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.முன் வரிசை பற்கள் பெரிதாகவும் வேலை பழு அதிகமாகவும் காணப்படும்.சுறா மீன்கள் உணவை அரைத்து உண்பவை அல்ல,இவை உணவை பற்கள் முலம் துண்டாக்கி விழுங்கிவிடும்.இதன் பல் சேதமடைந்தால் அல்லது விழுந்தால் அதற்க்கு மாற்றிடாக புதிய பல் முளைக்கும்.சுறா மீன் இனத்திற்கு இனம் கொன்று தின்னும் உணவுக்கு ஏற்ப பல்லின் வடிவம்,அளவு வேறுபட்டிருக்கும்.சுறா மீன்கள் கடல் வாழ் பாலூட்டிகள்,மீன்கள்,சில வேளை பிற சுறாக்களை உணவாக்கிகொள்ளும்.சுறா உணவில்லாமல் சில மாதங்கள் உயிர் வாழ கூடியது.இக்காலத்தில் அதன் கல்லீரலில் உள்ள கொழுப்பை பயன் படுத்தும்.
சுறா மீனிற்கு ஐந்து அல்லது ஏழு சோடி ( நீண்ட குறுகிய) செவுள் துவாரம் அதன் தலைக்கு அருகில் அமைந்திருக்கும்.சில சுறாவுக்கு விசேடமாக கண்களுக்கு அருகில் மேலதிகமாக ஒரு சோடி செவுள் துவாரம் காணப்படும்.இது ஒட்சிசனை நேரடியாக கண்ணுக்கும் மூளைக்கும் வழங்கும்.மீன்களுக்கு உள்ளது போன்று இதற்க்கு செவுள் மூடி(gill cover) காணப்படாது.சுறாகள் கடல் மீன்களை போல் நீரை குடிப்பதில்லை.இவற்றின் இரத்தம் மற்றும் திசுக்களில் அதிக உப்பு காணப்படும்.கடல் நீரை விட சுறாவில் உப்பின் செறிவு அதிகம்.இதன் காரணமாக சுறாவின் செவுள் பகுதியில் காணப்படும் தேர்ந்து புகவிடும் மென்சவின் ஊடு பிரசாரணம்( நீர்ச்செறிவு கூடிய இடத்திலிருந்து நீர்ச்செறிவு குறைந்த இடத்திற்க்கு நீர் செல்வது.) நடைபெறும்.இவ்வாறு நீர் செவுள் ஊடாக பாயும்போது செவுள் உள் காணப்படும் இரத்தக் குழாய்கள் ஒட்சிசனை நீரில் இருந்து பெறும்.சுறாமீனின் இதயம் 'S'வடிவ குழாய் போன்றது.இது சுறாவின் தலை பகுதியில் அமைந்துள்ளது.
சுறாவின் உடலை தலையில் இருந்து வால் நேக்கி தடவினால் அதன் தோல் வழவழப்பாக இருக்கும்,ஆனால் எதிர் திசையில் தடவினால் கரடு முரடாக(வெட்டக்கூடியதாக) காணப்படும்.சுறா மீனுக்கு மனிதனைப்போல் சகல புலங்களும் உண்டு.இதனால் மங்கலான வெளிச்சத்தில் கூட நன்றாக பார்க்க முடியும்.சுறாக்கள் மிகச் சிறந்த மோப்ப சக்தியை கொண்டுள்ளன.ஒரு மில்லியன் நீர் துளிகளில்(100 லீட்டர்) ஒரு துளி இரத்தம் இருந்தாலும் இவற்றால் 0.25மைல்(0.4km) தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும்.

தொடரும்...