ராஜ சிறுத்தை

பூனை இனத்தை Panthera, Felis என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.Panthera பிரிவிலே பெரும் பூனைகள், சிங்கம், ஜக்குவார், புலி, சிறுத்தை போன்றவை அடங்கும்.சிறுத்தையின் தோலில் சிறிய கரும்புள்ளிக் கூட்டங்கள் காணப்படும்.ஆனால் ராஜ சிறுத்தையின்(king cheetah) தோலில் சிக்கலான பெரும் கரும்புள்ளிகளுடன் இதன் முதுகில் (அணில் முதுகில் காணப்படுவது போல்) நீள கோடுகள் காணப்ப்டும்.இவ்வகை சிறுத்தைகள் மிக அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளன.முதன் முதலில் சிம்பாவே காட்டில் 1926 இல் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பின் 1975 வரை ஆறு தடவையே அவதானிக்கப்பட்டது.இதனால் இந்த ராஜ சிறுத்தையை புதிய இனமாகவும் சிறுத்தையினத்தின் உள் பிரிவாகவும் சிலர் கருதி விவாதித்தனர்.இதற்கு முற்றுப்புள்ளியாக 1980 இன் முற்பகுதியில் தென் ஆபிரிக்காவில் உள்ள De Wildt Cheetah Center இல் சாதாரண சிறுத்தை இரண்டு ராஜ சிறுத்தைக் குட்டிகளைப் போட்டது.இதன் பின்னர் இந்த ராஜ சிறுத்தையின் பிறப்புக்கு DNA இல் ஏற்படும் மாற்றமே காரணம் என அறியப்பட்டது.தற்போது உலகத்தில்(சிம்பாவே,ஆபிரிக்கா காட்டில்) பத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் இந்த ராஜ சிறுத்தைகள் வாழ்வதாக நம்பப்படுகின்றது.

2 பின்னூட்டங்கள்:

இறக்குவானை நிர்ஷன் said...

காண்டீ,
ஆரம்ப காலங்களில் இவ்வாறான சிறுத்தைகளே இருந்ததாகவும் இயற்கைக்கூறு மாற்றங்களினால் அவற்றின் உடம்பிலுள்ள கோடுகள் புள்ளிகளாக மாறியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?

காண்டீபன் said...

//இறக்குவானை நிர்ஷன் said...
காண்டீ,
ஆரம்ப காலங்களில் இவ்வாறான சிறுத்தைகளே இருந்ததாகவும் இயற்கைக்கூறு மாற்றங்களினால் அவற்றின் உடம்பிலுள்ள கோடுகள் புள்ளிகளாக மாறியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?//

நிர்ஷன்,
நான் நீங்கள் கூறுவது போல் அறிய வில்லை,அறிந்தால் சொல்கின்றேன்...