தற்காப்பில் சிறந்தவை சிலந்திகள்.இவை இரையிடம் இலகுவில் அகப்பட்டுக் கொள்ள மாட்டாது.சில அவசர சிலந்திகள் தமது அவசரத்தால் இரையை தப்பிக்கவிட்டு விடும்.உதரணமாக சிலந்தி வலையில் சிள் வண்டு மாட்டிக்கொண்டதும் நெபிலியா என்ற சிலந்தி உண்வை உண்ண அவசரமாக இரையை நோக்கிச் செல்லும்.அந்த நேரம் பார்த்து சிள் வண்டு தன் வயிற்று அடிப் பாகத்தில் உள்ள சுரப்பியை நெபிலியா சிலந்தி நோக்கி வெடிக்க வைப்பதோடு காரமான திரவத்தையும் அதன் மீது பீச்சுகின்றது.இந்த எதிர்பாராத தாக்குதலில் இலிருந்து நெபிலியா சிலந்தி மீள முன் சிள் வண்டு தப்பித்துக்கொள்ளும்.ஆனால் அர்கோபி சிலந்திகள் மாட்டிக்கொண்ட சிள் வண்டைச் சுற்றி சிள் வண்டு தப்பிக்காமல் தந்திரமாக வலையைப் பின்னும் பின்னர் சிள் வண்டு இறந்த பின் உண்கின்றது.சில பூச்சிகள் சிலந்தியை அதன் வலையில் சந்தித்து போர் புரிந்து வெற்றி கொள்கின்றன.அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றை இங்கு காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment