ஈருடக மீன்

மனிதர்களுக்கு பொழுதுபோகாவிட்டால் கடற்கரைக்குப் போவதுபோல் மீன்களுக்கு பொழுதுபோகாவிட்டால் தரைக்கு வருமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்கின்றது mudskipper(மட்ஸ்கிப்பர்?)என்னும் மீன்.பெரும்பாலான மீன்கள் நீரில் மாத்திரம் வாழ்கை நடத்துவன. ஆனால் இந்த மட்ஸ்கிப்பர் நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடையது.அதிக நேரத்தை நீருக்கு வெளியில் செலவு செய்கின்றன.இவற்றை நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படும் பாறைகள்,வெளித்தெரியும் மர வேர் மற்றும் சேறு நிலத்தில் காணலாம்.நீருக்கு வெளியில் தனது வலிமையன துடுப்புகளைப் பயன்படுத்தி நடக்குகின்றன.தனது இரண்டு துடுப்புக்களையும் முன் வைத்துக்கொண்டு உடம்பை முன் இழுப்பதன் மூலம் இவை நகருகின்றன.இவ்வாறு நகர்வதற்கு இதன் வலிமையன மார்புத்தசை உதவி புரிகின்றது.தரையிலும் உணவு வேட்டையில் ஈடுபடும் இவை நீச்சல் திறன் குறைந்தவை.இந்த மட்ஸ்கிப்பர் மீனுக்கு கண்கள் தலையின் மேல் பகுதியில் காணப்படும்.இதனைப் பயன் படுத்தி 360 பாகையில் நடக்கும் அணைத்தையும் அவதானிக்க முடியும்.நிலத்தை தோண்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இவற்றால் 15 சென்ரீமீட்டர் வரை வளரமுடியும்.

7 பின்னூட்டங்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்பரே!
எனக்கு இந்த மீனைப் பார்த்தால் ஓணான் ஞாபகம் வரும்; பல தடவை விபரணச் சித்திரத்தில் பார்த்துள்ளேன். புத்திசாலித் தனம் மிக்கதும் கூட.
ஆபிரிக்கக் குளத்தில் வாழும் ஒரு கெளிற்று வகை சுமார் ஒரு இரவு பூராகவும் தரையில் வாழக்கூடியது.
குளம் வற்றும் போது இது ,வற்றிய குளத்தை விட்டு நீருள்ள குளம் நோக்கி வெய்யிலையும்;எதிரிகளையும் தவிர்க்க இரவில் பயணம் செய்யும்; அதன் பக்க வாட்டில் உள்ள முள்ளுடன் கூடிய வலிப்பானானையே ஊர்வதற்கு பாவிக்கிறது.நீருள்ள குளத் திசையை காற்றில் வரும் ஈரப்பதத்தை வைத்து உணர்வதாகக் கூறினார்கள்.
இந்த மீன் நெடு நேரம் பகலில் கூட இருக்கக் கூடியது.

காண்டீபன் said...

யோகன் பாரிஸ் வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

நானும் பார்த்தவுடனேயே ஓணான் என்றுதான் நினைத்தேன் காண்டீபன். வித்தியாசமானதொரு தகவல். யோகனின் மேலதிக தகவல்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

நிறைய எழுதுங்கள் காண்டீபன். நீங்கள் இந்த வலைத்தளத்தில் தரும் பல்வேறு தகவல்களை நான் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

காண்டீபன் said...

வருகைக்கும்,ஆதரவுக்கும் நன்றி நிர்ஷன்...

Anonymous said...

உங்கள் தொகுப்புக்கள் நன்று. தொடருங்கள். தீபன்

காண்டீபன் said...

வருகைக்கு நன்றி தீபன்

Indian said...

அமெரிக்காவிலும் ஒரு வகையான தரையிலும் நடக்கும் மீன் வேறெதோ கண்டத்திலிருந்தோ, நாட்டிலிருந்தோ அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அவை கிழக்கு மாநிலங்களில் இருந்து மேற்கு நோக்கி வந்துள்ளதாக ஓரிரு வருடங்களுக்கு முன் LA Times நாளிதளில் படித்ததாக நினைவு.