கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் கொண்டவையே மீன்கொத்திகள்.இவை பெரும்பாலும் சிறு மீன்கள்,பூச்சிகள்,தவளைகள் போன்றவற்றை உணவாக உண்டாலும்,சிலவேளை பழங்களையும் உண்பவை.நீர் நிலையருகில் தனக்கு ஏற்ற உணவுக்காக காத்திருக்கும் இவை நீரின் மேற்பரப்பில் உணவை கண்டவுடன் சுழியோடிப் பிடித்து உண்கின்றன.இவற்றின் கண்கள் நீருள்ளும் தெளிவாக பார்க்கக் கூடியது.முதலில் அதன் தலைப்பகுதியே நீர்ப்பரப்பை ஊடுருவிச் செல்லும், உணவை பிடித்தபின் தனது சிறகை விரித்து வேகத்தை குறைத்துக் கொண்டு மீண்டு, நிருக்கு வெளியே பறக்கும்.இங்கு மீன்கொத்தி வேட்டையாடும் காட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டங்கள்:
ஆஹா அருமை அருமை.
தொடருங்கள். வாழ்த்துக்கள்
காண்டீபன்!
இதை மீன் குத்திப் பறவை எனக் கூற வேண்டுமெனப் படித்ததாக ஞாபகம்.
பொதுவாகக் கடல் பறவைகளில் பல இதே வழியையே கையாளுகின்றன.
நீங்கள் பல பதிவுகள் உயிரினங்களைப் பற்றிப் போடுகிறீர்கள். அவதானித்தேன்.
நான் விபரணச் சித்திரம் விரும்பிப் பார்பேன். வாரவுறுதி அதிலே கழிப்பேன்.
விலங்குலகு அற்புதம் நிறைந்தது.
நிலா
வருகைக்கு நன்றி...
யோகன் பாரிஸ் உங்களை சில நாட்களாக காணக்கிடைக்கவில்லை....?
//இதை மீன் குத்திப் பறவை எனக் கூற வேண்டுமெனப் படித்ததாக ஞாபகம்.//
பாடல்(கவிதை) வரிகளில் மீன் குத்திப் பறவை எனக் கூறுவது வழக்கம்(!)
தமிழ் விக்கிபீடியாவில் மீன்கொத்தி எனக்காணப்படுகின்றது இதுவும் சரி என நினைக்கின்றேன்.
//நீங்கள் பல பதிவுகள் உயிரினங்களைப் பற்றிப் போடுகிறீர்கள். //
உயிரினங்களைப் பற்றி புதிய விடயங்கள் தெரிந்துகொள்ளும் நோக்கம் தான்!
வருகைகு நன்றி
Post a Comment