திமிங்கல சுறா
திமிங்கல சுறாவே மிகப்பெரிய சுறாவும் மிகப்பெரிய மீனுமாகும்.(சுறா ஒரு மீன் வகையைச் சேர்ந்தது).இது அகலமான தட்டையான தலையையும்,ஐந்து சோடி பெரிய நீளமான செவுளையும் கொண்டிருக்கும்.வாலின் கீழ் துடுப்பை விட மேல் துடுப்பு பெரிதாக காணப்படும்.திமிங்கல சுறாவின் நிறமானது கடும் சாம்பல் நிறத்தின் மீது மஞ்சள் புள்ளிகள் எழுமாறாகக் காணப்படும்.தோலின் தடிப்பு 4 அங்குலம்(10 சென்டி மீட்டர்)ஆகும்.திமிங்கல சுறா 50 அடி(15மீட்டர்) வரை வளரக்கூடியது.இதன் நிறை 15 தொன்(tons) ஆக காணப்படும்.வழமைபோல் பெண் சுறா ஆண்சுறாவை விட பெரிதாக இருக்கும்.திமிங்கல சுறாவானது தனது முழு உடலையும் பக்கவாட்டாக அசைப்பதன் மூலம் நீந்துகின்றது.(மற்ற சுறாக்கள் வாலை அசைப்பதன் மூலம் நீந்தும்.)இதன் வேகம் மணிக்கு 5 கிலோமீட்டர்(5kph)ஆகும்.
திமிங்கல சுறாவின் வாய் சுமார் 4 அடி(1.4மீட்டர்)வரை அகலமானது.இவ் வாய் மற்ற சுறாக்களுக்கு உள்ளதுபோல் தலையின் கீழ் பகுதியில் காணப்படாமல் தலையின் முன் பகுதியில் காணப்படும்.இதன் வாயினுள் 3,000 மிகச்சிறிய பற்கள் இருந்தபோதும் அவற்றின் பயன்பாடு சிறிய அளவில்தான் அமையும்.இதற்கு காரணம் திமிங்கல சுறா உணவை வடிகட்டி உண்பதே(filter feeders).திமிங்கல சுறா தனது வாயை திறந்தவாறு நீந்திச்செல்லும்.இதன் போது சிறுமீன்கள்,இறால்கள் போன்ற உணவு அடங்கிய நீரை உறிஞ்சி வாயினை நிரப்பிக் கொள்ளும்.வாயை முடிய பின்னர் சுறாவானது தனது செவுளை பயன்படுத்தி நீரில் இருந்து தனது உணவை பிரித்து உண்ணும்.செவுளில் காணப்படும் மென்சவ்வு ஆனது உணவை வெளிச்செல்லாமல் தடுப்பதோடு நீரை வெளியேற்ற உதவும்.இவ்வாறு சுறாவின் ஐந்து சோடி செவுளினால் ஒரு மணித்தியாலத்தில் (வாயினால் பெறப்படும்)6,000 லீட்டர் நீரை வெளியேற்ற முடியும்.
மிதமான சுடுள்ள நீரில் (பூமத்தியரேகைக்கு அருகில்)வாழும் திமிங்கல சுறா பெரும் நேரத்தை நீரின் மேற்பரப்பில் கழிக்கும்.இவை தனித்தே காணப்படும்.கூட்டமாகக் காண்பது அரிது.பிறக்கும்போது திமிங்கல சுறாவின் குட்டியின் நீளம் 2 அடி(60சென்டி மீட்டர்)ஆகும்.100 - 150 வருடங்கள் வாழும் என கணக்கிடப்பட்ட இவை தனது 30 ஆவது வயதில் இனவிருத்திக்கு தயாராகும்.
basking சுறா
basking சுறாவே இரண்டாவது பெரிய சுறாவாகும்.இது 33 அடி(10 மீட்டர்) நீளமுடையது.ஆண் சுறா 30 அடி(9மீட்டர்) நீளமுடையது.இதுவும் திமிங்கல சுறாவை போலவே மீன்குஞ்சுகள்,மீன் முட்டைகளை வடிகட்டி உண்ணும்.இது கரையோர மித உஷ்ண கடலில் வாழும். நீரின் மேற்பரப்பில் அதிக நேரத்தை செலவிடுவதால் இதனை sunfish என அழைப்பார்கள்.basking சுறா தனியாக அல்லது சோடியாக அல்லது குழுவாக பயணம் செய்யும்.ஆங்கிலத்தில் இக்கூட்டத்தை School என அழைப்பார்கள்.இதில் 100 வரையான basking சுறாக்கள் காணப்படும்.basking சுறா கருக்கட்டி 3.5 வருடங்களின் பின் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை இடும். இந்த குட்டி பிறக்கும் போது 5.5அடி(1.7 மீட்டர்) நீளமுடையது.இது 2 - 4 வருடத்தில் பருவம்(sexual maturity) அடையும்.basking சுறா உணவுக்காகவும்,எண்ணெய்க்காகவும் வேட்டையாடப்படுகின்றது.
தொடரும்...
0 பின்னூட்டங்கள்:
Post a Comment