சுறா மீனின் ஆரம்ப காலம்(பாகம் II)

அழிவடைந்த அங்கிகளை ஆராய்வதற்க்கு அதன் உயிர்ச்சுவடு உதவுகின்றன.ஆதிகாலத்தில் வாழ்ந்த அங்கிகள் இறந்து கற்பாறைகள்,பனிக்கட்டி,சேறு போன்றவற்றினுள் பிடிக்கப்பட்டு சிதையாமல் எஞ்சியுள்ள அங்கியின் கடினமான பாகங்கள் அல்லது அங்கியின் அடையாளங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களாகயிருத்தல் உயிர்ச்சுவடு எனப்படும்.உயிர்ச்சுவடு பெருமளவில் அடையற்பாறைகளில் காணப்படுகின்றது.இவ்வாறு தோண்டி எடுக்கப்படும் உயிர்ச்சுவடுகளின் வயதைக் கணிப்பதற்கு மிகவும் பொதுவான முறை உயிர்ச்சுவட்டில் உள்ள காபன் சமதானிகளின் வயதைக் கணித்தலாகும்.
மிகப் பழைய காலத்தைச் சார்ந்த சுறாவின் எஞ்சி அழிந்து கிடக்கும் "செதிள்கள்"(scales)உயிர்ச்சுவட்டின் படி அவை 420 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவை என்பதாகும்.அதாவது Silurian (சிலூரியன்) காலத்தின் முற்பகுதியாகும்.இந்த Silurian காலத்தில்தான் தாடை கொண்ட மீன்கள் தோற்றம் பெற்றன.ஆதியான என்பு மீன்கள்,சுறாக்கள் என்பன நவின வகைகளிற்கு முன்னோடியாக இருந்தன.சில வகை மீன்கள் வளியைச் சுவாசிக்கும் தன்மையை விருத்தி செய்தன.இவை சுவாசப்பை மீன்கள் எனப்படும்.இவை தரைவழ் முள்ளந்தண்டு விலங்குகள் தோன்றுவதற்கு வழிகோலியது.
சுறாவின் உயிர்ச்சுவடு கிடைப்பது அரிதானது.சுறாவுக்கு மீன்களை போல் எலும்புகள் கிடையது குருத்தெலும்பே உண்டு.இது சிறந்த உயிர்ச்சுவடாக அமைவதில்லை.ஆரம்ப கால சுறாக்களின் முக்கிய உயிர்ச்சுவட்டு ஆதரமாக கிடைப்பது அதன் பற்களே.இவ்வாறு கிடைக்கப்பெற்ற "மும் முனை பல்" உயிர்ச்சுவட்டின் படி அப்பல்லுக்குரிய பண்டைய சுறா 360 மில்லியன் வருடத்திற்கு முற்பட்டவை (இப்பகுதி Devonian (டிவோனியன்)காலத்தின் பிற்பகுதி ) என்றும் 1.5-6 அடி(0.5-2 மீட்டர்) நீள முடைய மாமிச உண்ணி எனவும் அறியப்படுகின்றது.

Orthacanthus சுறா

Orthacanthus சுறா பண்டைய கால நன்னீர் சுறாவாகும்.சுமார் 280 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது(Paleozoic யுகத்தைச் சேர்ந்தது).இதற்கு தலையின் பின் பகுதியில் நீளமான முள் ஒன்று மண்டை ஓடிலிருந்து வளர்ந்திருக்கும்.இதன் பல் பெரும்பாலான சுறாவிற்கு உள்ளதுபோல் 'V'வடிவமாகும். Orthacanthus சுறா ஓர் மாமிச உண்ணியாக விளங்கியது.

Hybodus சுறா இப் பண்டைய சுறா Paleozoic யுகதின் Carboniferous காலத்தை உருவக்கியது.இது 7.5 அடி(2.5மீட்டர்) நீளமுடையது.இச் சுறா Mesozoic (மீசொயிக்) யுகதின் இறுதியில் அழிவடைந்தது.இந்த Mesozoic யுகம்(250மில்லியன் ஆண்டுக்கு முன் - 65மில்லியன் ஆண்டுக்கு முன்) மூன்று காலமாக பிரிக்கப்படும்.அவை ஆவன Triassic,Jurassic,Cretaceous காலங்கள் ஆகும்.Triassic காலத்தில் டைனோசர்கள் தோன்றின.பின் பல்வகைமை அடைந்து Jurassic காலத்தில் ஆட்சியடைந்தது.இக்கால கட்டத்தில் நவின வகை சுறாக்கள் விருத்தியடைந்தன(150 மில்லியன் வருடங்களுக்கு முன்).இந்த Mesozoic யுகத்தின் இறுதி காலமான Cretaceous இல் டைனோசர்கள் ஆட்சியின் உச்ச நிலையை அடைந்தன.பின் குறுகிய புவிக்காலத்தில் முற்றாக அழிவடைந்தன.இதற்கு காரணம் 65மில்லியன் வருடங்களுக்கு முன் பாரிய விண்கல் ஒன்று புவி மீது மோதியமையே ஆகும்.இவ்விண்கலானது Mexico வளைகுடாவில் வீழ்ந்து அங்கு ஆழமாகப் புதைந்தது.இதன் விளைவால் தூசுக்களால் ஆன மிகப்பெரிய முகில் கூட்டங்கள் தோன்றின.இம்முகில் கூட்டங்களால் சூரிய ஒளி புவிமேற்பரப்பை சென்றடைவது தடுக்கப்பட்டது/குறைக்கப்பட்டது.இதனால் முதலுற்பத்தி பாதிப்படைந்து டைனோசர்கள் முற்றாக அழிந்தன.அத்துடன் Ammonites விலங்குக்கூட்டங்களும்,Hybodus சுறாக்களும் அழிவடைந்தன.

தொடரும்...

0 பின்னூட்டங்கள்: