சிவாஜி படத்தில் ரஜனி வெள்ளைக்காரன் போல் ஒரு பாட்டுக்கு வருவார்.இதற்கு கணனி உதவியது.ஆனால் ஒரு சில மனிதர்கள் உச்சி முதல் பாதம் வரை வெள்ளையர் போன்ற உடல் வண்ணத்தையும் கண்ணின் கரு விழியும் முடியும் நிறமற்றும் கண்டிருப்போம்.இவர்கள் ரோப்பியர்கள் மத்தியில் கூட காணப்படுகின்றனர்.இதனை ஒருவித நோய் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தோல் கலங்களில் உற்பத்தி செய்யப்படும் மெலனின் மனிதனின் நிறத்திற்கு காரணமாக் அமைகின்றது.இதனைக் கட்டுப்படுத்துவது DNA ஆகும். DNA இல் ஏற்படும் மாற்றமே இன் நோய்க்கு காரணம்.இதனை அல்பினீசியம் என்பர்.இது சகல உயிரினங்களுக்கும் பொதுவான நோய்.தாவரங்களுக்கு இந்த அல்பினீசியம் வந்தால் உணவு தாயரிப்பதற்கு பச்சையம் இல்லாமல் முளைத்த உடனேயே இறந்து விடும்.ஆனால் விலங்குகளை பொறுத்தமட்டில் இணைத்தேர்வின் போது பிரச்சனையினை எதிர் நோக்குகின்றன.இவ் இனத்தோடு வேறு பால் உயிர்கள் இணை சேராது எனவே இவை தனியாகவே வாழ்ந்து இறந்துவிடும்.இதனால்தான் நாம் இவுயிர் இனதை பார்ப்பது கடினம்.ஆனால் இதனை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.இந்துக்கள் இந்திரனுடைய வெள்ளை யானை(ஐராவதம்?) பற்றி அறிந்திருப்பார்கள்.அட! வெள்ளை காக்கா கூட உண்டு.இதில் சில வெள்ளை உயிரினங்களை கிழே காணலாம்.
மான்
குரங்கு
ஒட்டைச்சிவிங்கி
சிங்கம்
புலி
பாம்புமயில் கங்காரு
காகம்
திமிங்கலம்
கரடி
பருந்து
ஒட்டகம்
பென்குயின்
அணில்
moose
2 பின்னூட்டங்கள்:
அல்பினீசியம் அணில்கள் மென்சிவப்பு நிறக் கண்ணுடன் காணப்படும்.ஒரு மில்லியன் அணில்களில் 10 அல்பினீசியம் அணில்கள் பிறக்கும்.இந்த அணிலைப்பற்றி மேல்திக தகவல் ஆங்கிலத்தில்
http://www.arkcity.net/stories/071806/com_0001.shtml
இப் பதிவில் மேலதிகமாக அல்பினீசியம் நோய்க்குள்ளான சில உயிரினங்களின் படம் சேர்க்கப்பட்டுள்ளன
Post a Comment