துப்பினால் தப்பமுடியாது

பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை எதிரியின் கண்களை நோக்கி பீச்சுகின்றன.இவ் விஷம் கண்ணில் பட்ட உடனே கண் குருடாகிவிடும்.இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும்.இரையை ஏணைய பாம்புகளைப்போல் கடித்து உணவாக்கிக் கொண்டாலும்,சில வேளை இரை சவாலாக விளங்கும்போது இவ்வாறு விஷத்தை பீச்சிக் கொல்கின்றன.இப்பாம்புகள் உணவாக தவளைகள்,சிறு முலையூட்டிகள் மற்றும் பறவைகளை உட்கொள்கின்றன.இந்த விஷம் உமிழும் கறுப்பு நாக பாம்பினால் 2 மீட்டர் தூரத்திற்க்கு விஷத்தை பீச்ச முடியும்.இப் பாம்புகள் 1.5 மீட்டர் நீளம் வரை வளரும்.யூன்,யூலை மாதங்களில் இணை சேரும் இப்பாம்புகள், 6 தொடக்கம் 20 முட்டைகளை இட்டு 88 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

4 பின்னூட்டங்கள்:

நற்கீரன் said...

உங்கள் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிலும் (www.ta.wikipedia.org) சேர்த்தால் நன்று.

காண்டீபன் said...

நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்கின்றேன்.உங்கள் கருத்துக்கு நன்றி நற்கீரன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

சிறுகுறிப்பு ஆனாலும் மிகவும் செறிவாக உள்ளது. பாராட்டுக்கள்.

காண்டீபன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டொக்டர்.