ஆஸ்திரேலியாவில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் பண்ணையாளர் ஒருவர் கோழிகள் முட்டையிடுவதை ஊக்குவிப்பதற்காக(?) golf பந்துகளை கோழிக்கூட்டினுள் போட்டு வைத்துள்ளார்.அங்கு கோழி முட்டையைக் குடிப்பதற்கு வந்த மலைப்பாம்பு கோழி முட்டை என நினைத்து நான்கு golf பந்துகளை விழுங்கிவிட்டது.மறு நாள் வந்த பண்ணையாளர் golf பந்துகளைக் காணாது குழப்பமடைந்து தேடியபோது மயக்கமுற்ற நிலையில் இருந்த மலைப்பாம்பினைக் கண்டார்.உடனடியாக, பண்ணையாளர் மலைப்பாம்பினை வைத்தியசாலையில் சேர்த்தார்.வைத்தியர்கள் மலைப்பாம்பினைப் பரிசோதித்த போது இதன் சிறுகுடலில் அந்த நான்கு golf பந்துகளும் இருப்பது தெரியவந்தது.Golf பந்துகளை மருந்து மூலம் கரைக்க முடியாததால் பாம்பிற்க்கு சத்திர சிகிச்சை செய்து இந்த golf பந்துகள் அகற்றப்பட்டன.மலைப்பாம்பு குணமடைந்த பின் காட்டில் விடுவதற்கு வைத்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்பட்ட மலைப்பாம்பினை இங்கு காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment