நீர்யானைக்குட்டியை தத்தெடுத்த ஆண் ஆமை

2004 டிசம்பர் 26 அன்று ஏற்ப்பட்ட சுனாமியால் ஆசிய நாட்டு மக்கள் பெரும் உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்தனர்.உறவுகளை இழந்தோர் எராளம்.மனிதர்களுக்கு மட்டுமில்லை பிற உயிர் இனங்களுக்கும் இதே நிலைதான்.அவ்வாறன ஒர் சம்பவமே இது.சுனாமியால் கென்ய நாட்டின் கரையோரம் பாதிக்கப்பட்டபோது ஒரு வயது கூட நிரம்பாத நீர்யானைக்குட்டி ஒன்று தன் தாயை இழந்தது.இக்குட்டியை வன விலங்கு அதிகாரிகள் Mombassa க்கு கொண்டு வந்தனர்.அப்போது இதன் நிறை 300KG ,இக்குட்டிக்கு Owen என்று பெயர் சூட்டினர்.அங்கு ஒர் அதிசயம் நடந்தது.இக்குட்டியை 100 வயது நிரம்பிய ஆண் ஆமை தத்தெடுத்தது.அவ் ஆமை மகிழ்ச்சியாக நீர்யானைக்கு தாய் போன்று நடந்து கொண்டது. நீர்யானை கூட்டமாக வழும் மிருகம் .அதன் குட்டி தன் தாயுடன் 4 வருடமாவது இருக்க விரும்பும்.ஆனால் Owen இந்த ஆண் ஆமையை தன் தாயாக ஏற்றுக்கொண்டது.தாயை பின் தொடர்வதுபோல் பின் தொடர்ந்தது.யாரும் ஆமையை தொடச்சென்றால் நீர்யானைக்குட்டி கோபப்பட்டு துரத்துகின்றது.இரண்டும் ஒன்றாக நீந்துகின்றது,உண்கின்றது.இந்த அதிசயத்தை நிங்களும் பருங்கள்.

0 பின்னூட்டங்கள்: